search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக சட்டசபை"

    • கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
    • முதல் மந்திரி சித்தராமையா நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் மந்திரி சித்தராமையா 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

    அப்போது, தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்.

    பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    இந்த பட்ஜெட் உரையை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தார்.

    • சட்டசபையில் மாநில அரசுக்கு எதிராக பாஜக எம் எல்.ஏக்கள் முழக்கமிட்டனர்.
    • துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் இன்று அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

    பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக அவர்கள் அவையில் கூச்சல் எழுப்பினர்.

    சபாநாயகர் காதர் மதிய உணவுக்கு அவையை ஒத்திவைக்காமல் பட்ஜெட் விவாதத்தில் ஈடுபட முடிவு செய்து, தொடர்ந்து அவையை நடத்தும்படி துணை சபாநாயகர் ருத்ரப்பா லாமனியிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழலால் சட்டசபை புனிதம் கெட்டுவிட்டதாகவும், அதை சீர்படுத்த கோமியம் தெளித்ததாகவும் காங்கிரசார் தெரிவித்தனர்.
    • கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். நேற்றும், இன்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையை கோமியம் தெளித்து காங்கிரசார் சுத்தம் செய்தனர்.

    பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழலால் சட்டசபை புனிதம் கெட்டுவிட்டதாகவும், அதை சீர்படுத்த கோமியம் தெளித்ததாகவும் காங்கிரசார் தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    • முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 56.

    சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இதையடுத்து, பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,"எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும், மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு அவரது இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அளிக்கட்டும். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடக கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை நடத்தப்படுகிறது. 27-வது ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து கிளம்பியது. சேலம், கோவை, கொச்சின், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, விழுப்புரம் வழியாக வந்த ஜோதி யாத்திரை நேற்று புதுவைக்கு வந்தது.

    இன்று காலை ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும் புதூருக்கு கிளம்பியது. ஜோதி யாத்திரையாக வந்தவர்களுக்கு காங்கிரஸ் துண்டு அணிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்து ஜோதியை வழியனுப்பினார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி பிரதிநிதி ஜான்குமார், புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    கர்நாடக ஐ.என்.டி.யூ. பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் 27-வது ஆண்டாக ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரையை நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

    ராஜீவ்காந்தி இன்றைய காலத்தில் தலைவர்கள் இறந்தவுடன் மறந்து விடுகின்றனர். சாதனை புரிந்த தலைவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருப்பார். அதுபோல் ராஜீவ்காந்தி நினைவில் இருப்பவர்.

    ராஜீவ் விமான பைலட்டாக இருந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்திராகாந்தி அவரை அரசியலுக்கு இழுத்தார். அரசியலுக்கு வந்த ராஜீவ், நாடு விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார்.

    கம்ப்யூட்டரை அவர்தான் கொண்டு வந்தார். பஞ்சாயத்துராஜ் சட்டம், பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ராஜீவ் கால கட்டத்தில் நாடு நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. இருப்பினும் அரசியல் சூழ்ச்சியால் அவர் தோல்வி அடைந்தார்.

    அடுத்த தேர்தலில் வெற்றியடைய நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி பிரசாரத்துக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

    ஸ்ரீபெரும்புதூரில் தப்பினால் புதுவை, மயிலாடுதுறைதான் இலக்காக இருந்தது. இன்று நாடு ஒற்றுமையாக இருக்க ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிந்திய ரத்தம்தான் காரணம்.

    தற்போது நாடு மதச் சார்புடையவர்களிடம் சிக்கி தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் பல தொந்தரவு தருகின்றனர். தாக்குகின்றனர்.

    பா.ஜனதா ஜனநாயக முறையில் ஆட்சி அமைப்பதில்லை. பல இடங்களில் குறைந்த இடங்களை பெற்றிருந்தாலும் கோவா, மணிப்பூர், மேகாலாயாவில் அங்குள்ளவர்களை அரசியல் பலத்தால் மிரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.

    அதேபோல கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க நினைத்தனர். ஆனால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களை பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 இடங்களையே பிடித் திருந்தது.

    ஆனால், காங்கிரஸ், ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை பிடிக்க பேரம் பேசினர். அந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என கூறிவிட்டனர்.

    மோடி நாங்கள் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். விலைக்கு வாங்கி ஆட்சி செய்ய மாட்டோம். அரசுக்கு எந்த தொல்லையும் தர மாட்டோம் என்கிறார்.

    பின்னர் ஏன் கர்நாட காவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முன்வந்தார்? கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடகா கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும்.

    இதில், ஐகோர்ட்டு மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. 2019 பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராகி நாட்டில் அமைதியை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×